--- --:--:-- --

குருவி பண்ணையால் உடலில் ஏற்பட்ட பாதிப்பு..!

9

அரூர் அருகே தனியார் நபரின் குருவி பண்ணையால் அருகில் வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டி கிராமத்தில் பிரபு என்பவர் தனது வீட்டில் கிளி புறா உள்ள பல்வேறு வகையான 2000 மேற்பட்ட பறவைகளை வளர்த்து வருகிறார்.

 

குறிப்பாக இங்குள்ள குருவி பண்ணையால் அருகில் வசித்து வரும் ராமன் எங்களுடைய குடும்பத்திற்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ராமனின் மனைவி பிரியா தெரிவித்துள்ளார்.

 

எனவே தமிழக அரசு முறையாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குருவி பண்ணையை அகற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon