--- --:--:-- --

குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் புகார்..!

6

ஏற்காடு அருகே குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 5க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது.

 

அந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்துச் சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் காண்பித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். வட்டார வளர்ச்சி அதிகாரி முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon