தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞர்கள் மீது மோதிய ரயில்..!
நாகை மாவட்டம் வேதாரணியத்தில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். கோயில் திருவிழாவிற்காக சென்ற திருப்பூரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உள்ளனர்.
அப்பொழுது திருத்துறைப்பூண்டி அகஸ்தியன் பள்ளி பயணிகள் ரயில் மூன்று பேர் மீது மோதியுள்ளது. இதில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த இரண்டு பேர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து திருவாரூர் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





