பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன் மீது புகார்..!
மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியிடம் தகராறு செய்து தாக்கியதாக பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்த வளசரவாக்கம் ஆற்காடு சாலையை நோக்கி வேல்முருகன் தனது காரில் சென்றுள்ளார். அப்பொழுது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையை மூடி வேலை செய்வதாக மெட்ரோ பணி ஊழியர்களிடம் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.வாக்குவாதத்தின் போது வேல்முருகன் பணியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாடகர் வேல்முருகன் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகாரளித்துள்ளார். ஏற்கனவே இதே போன்று பாடகர் வேல்முருகன் கடந்த மார்ச் மாதம் சென்னையில் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





