--- --:--:-- --

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 20 ஆண்டுகள் சிறை.. ஆனால் நீதிபதி போட்ட உத்தரவு..!

3

மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று இளைஞர் அதே பெண்ணை திருமணம் செய்ததால் அவரது தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

 

ஆரணியை சேர்ந்த ராஜகுமார் என்று இளைஞர் கடந்த 2020 ஆம் ஆண்டு 19 வயதாக இருக்கும் பொழுது தன்னுடன் பணியாற்றிய மைனர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அத்துமீறியதற்காக திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்தது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராஜ்குமார் தற்பொழுது மேஜர் ஆகிவிட்ட அந்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக ஆதாரத்தை வழங்கிய நிலையில் அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon