--- --:--:-- --

சவுக்கு சங்கரை அடுத்து youtuber ஃபெலிக்ஸ் கைது..!

7

காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரைத் தொடர்ந்து ஃபெலிக்ஸ் நிர்வாகி ஜெரால்டு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல youtuber சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

காவலர்களை அவதூறாக பேசிய புகாரில் ஃபெலிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்று ஃபெலிக்ஸ் ஜெரால்ட் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

அந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதி குமரேஷ்பாபு, ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளார். அவதூறான கருத்துக்களை கூறத் தூண்டும் விதமாக நேர்காணலில் இருப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் என்று நீதிபதி கூறி இருந்தார். இந்த நிலையில் ஃபெலிக்ஸ் யூட்யூப் சேனல் எடிட்டர் ஜெரால்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon