--- --:--:-- --

மனைவி நடத்தையில் சந்தேகம்..குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்த கணவன்..!

4

சென்னை மேற்கு மாம்பலத்தில் இரு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவில் வசித்திருப்பவர் மோகன். இவரது மனைவி யமுனா.

 

இவர்களுக்கு சாய் என்ற மகளும் தேஜஸ் என்ற ஐந்து வயது மகனும் உள்ளனர். யமுனா வீட்டின அருகே உள்ள பிரின்டிங் பிரஸ்சில் வேலை செய்து வரும் நிலையில் மோகன் இரும்பு பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி காயலாம் கடைக்கு மொத்தமாக போட்டு விற்பனை செய்யும் தொழில் செய்து கொண்டுள்ளார்.

 

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மனைவி யமுனா மீது சந்தேகம் ஏற்பட்டு சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என மனைவி யமுனா கூறியதால் இரண்டு மாதங்களாக மோகனுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும் மகள் சாய், சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியிலும், ஒன்பதாம் வகுப்பு மகன் தேஜஸ் அருகே உள்ள நர்சரி பள்ளியிலும் படித்து வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் நேற்று பிற்பகல் பேட்டி எடுக்க வந்த மோகன் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுவிட்டு கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டுள்ளான் மனைவி வேலை முடிந்து வந்து பார்த்தபோது மூவரும் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon