மனைவியை வீட்டிற்கு அனுப்பாததால் ஆத்திரமடைந்து மாமனாரை கொலை செய்த மருமகன்..!
நாமக்கல் மாவட்டத்தில் குடும்பம் நடத்துவதற்கு மனைவியை அனுப்பி வைக்காமல் இடையூறாக இருந்த மாமனாரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக மருமகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ரவியின் இரண்டாவது மகளை திருமணம் செய்து கொண்ட பூபதி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததால் தலை பிரசவத்திற்கு தனது வீட்டிற்கு வந்த மகளை கணவர் வீட்டிற்கு ரவி அனுப்பி வைக்கவில்லை என கூறப்படுகிறது. அவரை மது குடிக்க வைத்து நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.






