--- --:--:-- --

கிரேன் உடன் சாலையில் கவிழ்ந்த சமாஜ்வாதி கட்சியினர்..!

7

த்திர பிரதேசத்தில் மகாராண பிரதாபின் சிலைக்கு சமாஜ்வாதி கட்சியினர் மாலை அணிவித்த பொழுது கிரேன் விழுந்து விபத்திற்கு உள்ளானது.

 

அம்மாநிலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் உள்ள மகாராண பிரதாபின் சிலைக்கு சமாஜ்வாதி கட்சியினர் மரியாதை செலுத்த வந்தனர். உயரத்தில் சிலை இருப்பதால் கிரேனில் ஏறி அதற்கு மாலை அணிவிக்க சமாஜ்வாதி தலைவர்கள் முயற்சித்தனர்.

 

பாரம் தாங்காமல் அந்த கிரேன் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் யாரும் காயமடையவில்லை என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்சி தலைவர்கள் பத்திரமாக இறங்கியதுடன் கிரேன் சரி செய்யப்பட்டு மீண்டும் மேலே உயர்த்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இதே சிலைக்கு சமாஜ்வாதி கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பாஜகவினர் இந்த சிலை மீது கங்கை நதி சர்ச்சைக்கு உள்ளானது.

 

Right Menu Icon