5 நாட்கள் அனுமதி கொடுங்கள்..நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீஸ் மனு..!
5 நாட்களில் காவலில் எடுத்த விவசாயிகளுக்கு அனுமதி கூறிய சைபர் கிரைம் காவல்துறையினர் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை கூறியதாக சவுக்கு ஷங்கரை தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சவுக்கு ஷங்கரை 5 நாட்களுக்கு காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் காவல் துறை மனு தாக்கல் செய்துள்ளது.
இது விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதனிடையே சவுக்கு சங்கர் காரில் 49 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பழனிசெட்டிபட்டி காவல் துறை அவரது உதவியாளர்கள் ராம் ரகு மற்றும் ராஜரத்தினத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த மகேந்திரன் என்பவரும் தற்பொழுது கைது செய்யப்பட்டார்.





