--- --:--:-- --

4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது..!

2

திண்டுக்கல்லில் பக்கத்து வீட்டிற்கு விளையாட சென்ற நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

 

திண்டுக்கல்லை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை பிச்சை மூர்த்தி என்பவர் குழந்தையுடன் சேர்ந்து விளையாடுவதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளது. அப்பொழுது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விளையாட வந்த குழந்தையை பிச்சைமுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

 

பின்னர் வீடு சென்ற நான்கு வயது குழந்தை மயங்கி விழுவதால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்பொழுதுதான் செல்வி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையிடம் விசாரித்ததில் மழலை மொழியில் குழந்தை நடந்ததை கூறியுள்ளது.

 

அதிர்ச்சடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து 35 வயதான பிச்சைமுத்து வைப்போம் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon