--- --:--:-- --

விபத்து பகுதியில் சிதறி உள்ள வெடிக்காத வெடிபொருளை கைப்பற்றும் பணி தீவிரம்..!

3

விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள வெடிப்பொருட்களை கைப்பற்றும் பணியில் நிபுணர் குழுவினர் நான்காவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கல்குவாரி வெடி விபத்தில் இதில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து நிகழ்ந்த பகுதியில் வெடிக்காமல் இருக்கும் பொருட்களை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்களை ஈடுபட்டுள்ளனர்.

 

விபத்து நிகழ்ந்த இடத்தில் முதற்கட்டமாக எஞ்சியிருந்த மூன்றாயிரம் கிலோ உயர் ரக வெள்ளி பொருட்களை கைப்பற்றி அவற்றை இரண்டு சரக்கு வாகனங்களில் தனியார் வெடி மருந்து சேமிப்பு கடைகளில் பாதுகாக்க சென்றனர்.

 

சிதறி கிடக்கும் வெடிப்பொருட்களை முழுமையாக கைப்பற்றி பாதுகாப்பான இடத்தில் கொண்டு சென்ற பின்னரே அடுத்தகட்ட பணி நடைபெற உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon