குடிநீர் தொட்டியில் நாய் கழிவுகள் கலந்த அவலம்..!
ராணிப்பேட்டையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வந்த குடிநீரில் நாய் கழிவுகள் இருந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே வஉ சி நகர் குடியிருப்பு பகுதி பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் துர்நாற்றம் வீசியது.
இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதியினர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து பார்த்தபொழுது அதில் நாய் கழிவுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தகவல் அறிந்து வந்து வருவாய் துறை அதிகாரிகள், குடிநீர் தொட்டியை முறையாக தூய்மைப்படுத்த உத்தரவிட்டனர். மேலும் தற்காலிகமாக டேங்கர் லாரி மூலம் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய உத்தரவிட்டனர்.






