பொட்டலமாக தெருவில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை..!
கேரளாவில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பொட்டலமாக வீசப்பட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சின் வித்யா நகர்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் பொட்டலம் கிடந்தது.
பிரித்து பார்த்த பொழுது அதில் பச்சிளம் குழந்தையின் சடலம் இருப்பது காண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறந்து இரண்டு நாட்களான பச்சிளம் குழந்தை உயிரிழந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களே சம்பவத்தில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






