காதல் விவகாரத்தில் பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்..!
கர்நாடகாவில் மின்கம்பத்தில் கட்டி வைத்து பெண்ணை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை மஞ்சுநாத் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இளம் பெண் உடன் மஞ்சுநாத் தலைமறைவானதால் அவருடைய வீட்டிற்கு பெண்ணின் உறவினர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்த மஞ்சுநாத்தின் தாயை வீட்டிலிருந்து இழுத்துச் சென்று கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தகவலறிந்து சென்ற காவல் துறையினர் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.






