மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் கணவன் தற்கொலை..!
பெரம்பலூர் அருகே மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பெரம்பலூர் மாவட்டம் கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மனைவி, சோலையம்மாளுக்கு இரண்டு ஆண்டுக்கு முன்பு குடல் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அதை தொடர்ந்து தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சோலையம்மாள் வலி தாங்க முடியாமல் விஷ மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் நடராஜனும் விஷமருந்தி மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அருகில் ஒரு மருத்துவமனைக்கி கொண்டு சென்றனர். அங்கு நடராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் கணவனும் விஷமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.






