முன்னாள் முதல்வர் அண்ணா சிலைக்கு குங்குமம் பூசியதால் பரபரப்பு..!
திருச்சியில் இளநிலை பொறியாளர் பல்கலைக்கழகம் அருகே முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணா சிலையில் மர்ம நபர்கள் குங்குமத்தை பூசி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து குங்குமம் பூசியவரை கைது செய்ய கோரி திமுக நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக சிலை மீது பூசி இருந்த குங்குமம் அழிக்கப்பட்டு தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யப்பட்டது.






