--- --:--:-- --

ரேபரேலி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்..!

1

த்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். உத்தரப்பிரதேசத்தில் அமேதி, ரேபரேலி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படவிருக்கும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த முடிவை காங்கிரஸ் கட்சி எடுக்காமல் இருந்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.

 

இவ்விரு தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்ட தேர்தலில் வருகிற 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தி ஆகியோர் நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை மேற்கொண்டனர்.

 

இதில் ரேபரேலி தொகுதியின் எம்பியாக இருபது ஆண்டுகள் பதவி வகித்த சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டதால், அந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

 

அதனோடு அமேதி தொகுதியில் போட்டியிட பிரியங்கா காந்தி விருப்பம் தெரிவிக்காததால், காங்கிரஸின் தீவிர விசுவாசியான கே.எல்.சர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

மனுத் தாக்கலின்போது அவருடன் தாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடனிருந்தனர்.

Right Menu Icon