ட்ராவலரின் பின்பக்க டயர் வெடித்ததால் விபத்து..13 பேர் காயம்..!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வந்து கொண்டிருந்த டெம்போ ட்ராவலரின் பின்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த ட்ராவலர் விபத்திற்கு உள்ளானதில் 13 பேர் காயம் அடைந்தனர்.
மதுரை கோயில் திருவிழாவிற்கு சென்று திரும்பிய பொழுது விபத்தில் சிக்கி உள்ளது. பின்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டில் இருந்து கவிழ்ந்தது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் காயம் அடைந்தனர்.





