--- --:--:-- --

ஏற்காட்டில் விபத்தின் எதிரொலியாக வாகனங்கள் சோதனை..!

8

ஏற்காடு பேருந்து விபத்து எதிரொலியாக அங்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் போலீசாரின் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

 

60-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் ஏற்காட்டிற்கு செல்ல வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு மலையடிவாரத்தில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி ஓட்டுநரின் தகுதி? எத்தனை ஆண்டுகள் வாகனங்களை இயக்கி வருகிறார்? என பல விவரங்களை கேட்டறிந்த பிறகு வாகனங்கள் செல்ல அனுமதி அளித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon