11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு..!
தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்.19இல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரில் 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
இதனிடையே, வாக்குப்பதிவின் போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அங்கிருந்த வாக்காளர்கள் வாக்களிக்காமல் அலறி ஓடினர். இதன் காரணமாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்.22) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




