2019 தேர்தலை விட தருமபுரியில் வாக்குப் பதிவு குறைவு..!
தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக தருமபுரியில் 82.41% வாக்குகள் பதிவாகின. அந்தவகையில், 2024 தேர்தலிலும் தருமபுரியிலேயே அதிகபட்சமாக 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஆனால், கடந்தத் தேர்தலை விட, இம்முறை 1% வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது. 2019 தேர்தலில் குறைந்தபட்சமாக தென்சென்னையில் 57.07% வாக்குகள் பதிவாகின. இம்முறை, அதைவிடக் குறைவாக மத்திய சென்னையில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது.






