கடும் உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்!
ஏப்ரல் மாதம் முதலே தங்கம் விலை கணிசமாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.வரலாறு காணாத உச்சத்தை எட்டும் தங்கம் விலை நேற்று ஏப்ரல் 16 ஆம் தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில், இன்று விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று ஏப்ரல் 17 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலையில் மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.6,870-க்கும், ஒரு சவரன் ரூ.54,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கமும் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.5,628-க்கும் ஒரு சவரன் ரூ.43,024-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.90-க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





