பள்ளி மாணவர்களை பரப்புரையில் ஈடுபடுத்தியதாக அதிமுகவினர் மீது குற்றச்சாட்டு..!
தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி பள்ளி மாணவர்களை அதிமுகவினர் பரப்புரையில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் பகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் போட்டியிடுகிறார்.
இவர்களை ஆதரித்து காமராஜபுரம் அரச மரத்தின் லயன் திரு பகுதிகளில் இரு கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். அப்பொழுது தாரை தப்பட்டைகள் முழங்க பள்ளி மாணவ மாணவிகள் கைகளிலும் அதிமுக கொடியை வைத்துக்கொண்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





