--- --:--:-- --

5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தடுப்பணைகள் கட்டாதது ஏன்?

download (4)

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழகத்தின் தடுப்பணைகள் கட்டாதது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். வெளிநாடு பயணத்தின் மூலம் நாற்பத்தொரு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளதாக கூறினார். பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் புதிய முதலீடுகள் மூலம் தமிழகத்தில் 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறுகிய எண்ணத்தால் குறை கூறுவதே ஸ்டாலினுக்கு வாடிக்கையாகி விட்டதாக கூறினார். இஸ்ரேல் பயணத்தை கிண்டல் செய்யும் முக ஸ்டாலின், திமுக ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது என கூற முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Right Menu Icon