--- --:--:-- --

திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு..!

3

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான் நேரில் சந்தித்து பேசி உள்ளார்.

 

இது குறித்து டெல்லி திகார் சிறையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பஞ்சாப் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். வரக்கூடிய மக்களவைத் தேர்தல் மத்தியில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கக்கூடிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்றைய தினம் பஞ்சாப் முதல்வராக பகவந்த்மான் சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்பின் பொழுது வரக்கூடிய தேர்தல் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் வியூகங்கள் குறித்து இருவரும் அழைத்ததாக கூறப்படுகிறது.

 

கட்சியை பொறுத்தவரையில் பல்வேறு முக்கிய மூத்த தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் இந்த தேர்தலை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக முன்வைக்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon