திராவிடர் விடுதலைக் கழகத்தை சேர்ந்த பெண்ணை பாஜகவினர் தாக்கியதாக புகார்..!
திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த பெண்ணை பாஜகவினர் தாக்கியதாக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாளையம் பகுதியில் பாஜக வேட்பாளர் ஏ.கே.முருகானந்தத்திற்கு ஆதரவாக அந்த கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அங்கு கடை வைத்திருக்கும் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்த பாஜகவினரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் சங்கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடைபெற்ற போது சங்கீதா தனது கைபேசியில் பதிவு செய்த வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





