--- --:--:-- --

ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் பிரசவ வலியால் துடித்த பழங்குடியின பெண் ..!

5

ஆந்திராவில் பிரசவ வலியால் துடித்த பழங்குடியின பெண்ணை கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே தூக்கி சென்றனர். ஆந்திர மாநிலம் அல்லூரில் ஆனந்தகிரி பகுதியில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

 

இதனால் சரியான போக்குவரத்து வசதி இல்லாமல் அங்குள்ள மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் பிரசவ வலியால் துடித்த நிறை மாத கர்ப்பிணியை கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர்.

 

நடு வழியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூக்கி சென்று மருத்துவமனையில் தாயையும் சேயையும் சேர்த்தனர். இதனிடையே சாலை வசதி செய்து தரக் கோரி பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon