--- --:--:-- --

தபால் வாக்கு பெட்டியில் குளறுபடி.. திருப்பத்தூரில் பரபரப்பு..!

5

திருப்பத்தூர் அருகே தபால் வாக்கு செலுத்தும் பெட்டியில் முறையாக சேமிக்கப்படவில்லை எனக்கூறி தேர்தல் அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. அப்பொழுது ஆசிரியர்கள் வாக்களிக்க தபால் வாக்கு சீட்டில் விநியோகம் செய்யப்பட்டது.

 

அப்பொழுது திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி ஆசிரியர்கள் வாக்கு செலுத்துவதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முறையான தபால் வாக்கு பெட்டியை வைக்காமல் மின்சாரத் துறையினர் பயன்படுத்தும் பெட்டியை வைத்துள்ளனர்.

 

மேலும் அதனை பூட்டுவதற்கு பூட்டு இல்லாமலும் சீல் வைக்காமலும் இருந்தது ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆகியுள்ளது. இது தொடரமாக தேர்தல் அதிகாரிகளிடம் வாக்கு செலுத்த வந்த ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மின்சார துறை பெட்டி மாற்றப்பட்டு சீல் வைக்கப்பட்ட தபால் வாக்கு பெட்டி வைக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon