பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்..!
தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் செயலர் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
அத்தோடு பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகி வரும் பிரதமரின் படத்தையும் மீட்க வலியுறுத்தியுள்ளனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் அரசுத்துறை நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களில் பிரதமர் முதலமைச்சர் ஆகியோரின் படங்களை அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையத்தில் தேர்தல் விதிமுறையை மீறி பிரதமரின் பிக்சட் வார திட்டம் உள்ளிட்டவை காணொளி வாயிலாக வருவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.





