சிக்னல் கோளாறு.. ஒரு மணி நேரத்தில் தாமதமாக சென்ற தென் மாவட்ட ரயில்கள்..!
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே லாரி மோதியதில் ரயில்வே கேட் சேதம் ஆகியது. அதனால் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன.
சோத்துபாக்கத்தில் மூடியிருந்த ரயில்வே கேட் மீது லாரி ஒன்று மோதியதால் சிக்னல் சேதமடைந்தது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்று கொண்டிருந்த ராமேஸ்வரம், முத்துநகர், அனந்தபுரி உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
சிக்னல் சரி செய்யப்பட்ட பின் அனைத்து ரயில்களும் தாராளமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





