பரப்புரைக்கு இரவு 10 மணிக்கு மேல் வந்த குஷ்பூ.. மக்கள் விரக்தி..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்சிகளுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டனர். வேலூரில் குஷ்பு வருவார் என்று எதிர்பார்த்து நின்ற மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ இரவு 8.30 மணிக்கு பரப்பரை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் இரவு 10 மணி வரையும் வரவில்லை. இதனால் மக்கள் விரத்தியடைந்த நிலையில் 10 மணிக்கு மேல் வந்த குஷ்பூ பரப்புரை மேற்கொள்ளாமல் மேடை ஏறி மக்களை பார்த்து கையசைத்து சென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





