சொத்துக்காக அடியாட்களை ஏவி கணவர் மீது தாக்குதல் நடத்திய மனைவி..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சொத்துக்காக கணவரை மனைவி அடியாட்கள் ஏவி தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தி – இந்துமதி தமது இடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் கணவர் தன்னை சித்திரவதை செய்வதாக தெரிவித்து இந்துமதி ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையும் திடீரென ஆனந்தின் வீட்டிற்குள் புகுந்த கும்பல் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் தன் மனைவி அவரின் உறவினர்கள் மூலமே தன்னை வீடு புகுந்து தாக்கியதாக கூறி புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





