பாஜகவில் இருந்து வெளியேறிய பிறகு அதிமுக சிறப்பாக உள்ளது : செல்லூர் ராஜு
பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததால் அதிமுக சிறப்பாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் செல்லப்பா, அதிமுக மாநிலம் மருத்துவ செயலாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மத்திய மாநில அரசுகளின் தவறான நடவடிக்கையால் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுவதாக உள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் போதை பொருள் கடத்தலுக்கு குஜராத் மற்றும் தமிழ்நாடு தளமாக விளங்குகிறது என்று சுட்டிக்காட்டியவர் பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்ததால் அதிமுக சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.






