--- --:--:-- --

தமிழ் தாய் வாழ்த்து பாடிய பொழுது செல்போனில் பேசிய தலைவரால் சர்ச்சை..!

9

திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பொழுது தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் செல்போனில் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடிய பொழுது தமிழக கட்டுமான தொழிலாளர்கள் வாரிய தலைவர் பொன் குமார் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

 

இதனால் அங்கிருந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனிடையே தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon