சாலை ஓரத்தில் தாயுடன் படுத்திருந்த நான்கு மாத கைக்குழந்தை கடத்தல்..!
தூத்துக்குடியில் அந்தோணியார் கோயில் அருகே கடந்த ஒன்பதாம் தேதி அதிகாலை சாலை ஓரத்தில் தாயோடு படுத்திருந்த 4மாத பெண் கைக்குழந்தையை கடத்திய நபரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி சிவராத்திரியை ஒட்டி தூத்துக்குடி சிவன் கோயிலில் நள்ளிரவு சாலை சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த கருப்பு சட்டை கருப்பு வேட்டி அணிந்த மூன்று பேரில் ஒருவர் தான் குழந்தையை கடத்தி சென்றுள்ளார் என்பது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறினர்.






