மனைவியை இழந்த சோகம் ஒரு பக்கம்.. வீட்டில் நடந்த திருட்டு மறுப்பக்கம்..!
கோவை செங்காளியப்பன் நகரில் வசித்து வரும் இரும்பு கடை வியாபாரி மனோகரன் தனது மனைவியின் மரணத்தையடுத்து சொந்த ஊரான திருச்சியில் தங்கியிருந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் அவரது கோவை வீட்டில் கைவரிசை காட்டியுள்ளனர்.
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 50 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் வீட்டில் நடந்த திருட்டும் மனைவியை இழந்த துக்கமும் மனோகரனுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





