குடிபோதையில் அப்பாவிடம் தகராறு.. மகன் போட்டோ ஸ்கெட்ச்..!
மதுபோதையில் தந்தையிடம் தகராறு செய்து வந்த நபரை ஆத்திரத்தில் சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேல் அனுப்பானடி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற மெண்டல் ரமேஷ் என்பவர் மதுபோதையில் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மது போதையில மெண்டல் ரமேஷ் கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு சென்றதில் ரத்த வெள்ளத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் அங்க இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
மதுபோதையில் தனது தந்தையிடம் ராமேஷ் அடிக்கடி தகராறு செய்து துன்புறுத்தி வந்ததால் ஆத்திரத்தில் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக சிறுவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். அதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.





