தஞ்சாவூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட நான்கு பேர் கைது..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் சினிமா படப்பாணியில் விரட்டிச் சென்று பிடித்தனர். வந்தவாசி காந்தி சாலையில் காவல்துறையினர் பணிகளில் ஈடுபட்டிருந்த பொழுது அதிரடியாக சந்தேகத்திற்கு இடமான இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் அதிவேகமாக வாகனத்தை இயக்கி எதிரே வந்த வாகனத்தின் மீது மோதியது. இதனை கண்ட டிஎஸ்பி ராஜு மற்றும் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை துரத்தி சென்று பிடித்தனர்.
அவர்களை சோதனையிட்டதில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியத்தில் 17 வயது சிறுவன் விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரிடம் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் மூன்று இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





