--- --:--:-- --

மக்கள் நீதி மையம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழா..!

5

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் திமுக அதிமுகவில் கூட்டணி பேச்சு வார்த்தையில் தொகுதி பங்கீடு போன்றவை விறுவிறுப்பாக நடைபெற்றது.

 

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தனது தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் விசிக இடதுசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த கூட்டணியில் தமிழக அரசின் மக்கள் நீதி மையம் கட்சியும் இடம்பெறப் போவதாக தகவல் வெளியாகி இருந்ததாலும் அந்த கட்சியுடன் மட்டும் திமுக இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

 

அதனால் மக்கள் நீதி மையத்தின் நிலைப்பாடு என்னவென்று தெரியாமல் இருந்துள்ளது. இப்படியான சூழலில் திமுக கூட்டணிகளுக்கு காங்கிரஸ் கட்சிக்கு விருது வழங்கப்படும் இடங்களில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் மக்கள் நீதி மையம் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

அதே சமயம் கைச்சின்னத்திலேயே மக்கள் நீதி மையம் வேட்பாளர்களை போட்டியிட வைக்க காங்கிரஸ் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ராகுல் காந்தி கமல்ஹாசன் இடையே நல்ல இணக்கம் இருப்பதால் இந்த கோரிக்கையை காங்கிரஸ் முன் வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon