--- --:--:-- --

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தேர்தலில் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவு..!

3

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தேர்தலில் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ளன. திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள அதன் சங்க அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

 

செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி நடைபெற இருந்தது. இதனிடையே அசோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கில் திரைத்துறை இசை கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

 

அந்த நிலையில் நேற்று நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு இசையமைப்பாளர் தீனா மற்றும் இசையமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இதன் வாக்குகள் என்னும் பணி அதிகாலை முடிந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon