தமிழக பட்ஜெட்.. இன்று வெளியாகப் போகும் முக்கிய அறிவிப்பு என்னென்ன..?
இன்று தாக்கல் செய்யப்படும் இருக்கும் பட்ஜெட்டில் தங்கள் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டங்களை அறிவித்திருக்கிறார்கள்.
கடந்த 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்க இருந்த நிலையில் அதற்கு முன்பு முதல்வரை சந்தித்து பேசியதன் காரணமாக அந்த வேலை நிறுத்த போராட்டத்தை தள்ளிவைத்தனர்.
எனினும் வரும் 26 ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும் ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. இதேபோன்று மற்ற அமைப்புகளும் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் பற்றி இடம் பெறுமாறு எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கூட்டத்தொடர் முடியும் வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை எனில் திட்டமிட்டபடி வரும் 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வெளிநிறுத்த போராட்டத்தை தொடங்க இருப்பதாகவும் ஜாக்டோ ஜியோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





