--- --:--:-- --

சக காவலரின் மனைவியை கடத்திச் சென்ற காவலர்.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..!

6

பெரம்பலூர் அருகே சக காவலரின் மனைவியை மது போதையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற காவலரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்தவர் பிரபாகரன்.

 

சம்பவத்தன்று மது போதையில் இருந்த இவர் அருகில் வசித்து வந்த சக காவலரின் மனைவியை மதுபோதையில் தாக்கி கடத்தி சென்றுள்ளார். இதை தொடர்ந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரிடம் இருந்து நூலிழையில் தப்பி வந்த பெண் தன் கணவரிடம் தகவல் தெரிவித்து இருக்கிறார்.

 

உடனே சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவலர் பிரபாகரனை கைது செய்த போலீசார் அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon