சென்னை அருகே பெண்கள் விடுதி அருகே கேட்ட சப்தம்.. 2 நாள் கழித்து பார்த்து பதறி போன பெண்..!
சென்னை அடுத்த பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி அருகே பிறந்த சில நாட்களை ஆன பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதி அருகே உள்ள குப்பை கொட்டும் இடத்தில் இருந்து இரண்டு நாட்களாக பூனை குட்டி அழுவது போல் சத்தம் கேட்டது. அந்த இடத்தில் இருந்த பூனை குட்டி அழுவதாக நினைத்துக் கொண்டு அந்த பெண்கள் அலட்சியமாக இருந்துவிட்டனர்.
அந்த சப்தம் அதிகமானதால் யுவராணி என்பவர் ஜன்னல் வழியாக பார்த்த பொழுது அங்கு பிறந்த சிறு நாட்களான பெண் குழந்தை எறும்புகள் மொய்த்த நிலையில் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். பூந்தம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்.
அங்கு குழந்தைக்குக்கு முதலுதவி சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பூந்தமட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





