வரதட்சணைக்காக காதல் மனைவியை கொன்ற கொடூர காதலன்..!
காதல் மனைவியை வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த கணவர் அவரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தங்கவேல் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா.
இவரும் அதே பகுதியை அந்த லோகேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருமணமான சில வருடங்களிலேயே மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்த லோகேஷ் பவித்ராவை சித்திரவதை செய்தது வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தன் தாய் வீட்டில் வசித்து வந்த பவித்ரா கணவன் மீது போலீசில் புகாரளித்த நிலையில் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து வீடு திருப்பிக் கொண்டிருந்த பவித்ராவை இடையில் வழிமறித்து தகராறு செய்த லோகேஷ் அவரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் தலைமறைவாக உள்ளவரின் கணவரை வலை வீசி தேடி வருகின்றனர் .





