--- --:--:-- --

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

7

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக புரோட்டான் முடக்க மத்திய தகவல் தொடர்புத்துறை திட்டம் திட்டமிட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு புரோட்டான் மெயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

 

13 தனியார் பள்ளிகளுக்கான மிரட்டல் விவகாரம் தொடர்பாக தரவுகளை தருமாறு சென்னை காவல்துறையினர் கோரி இருந்தனர். தங்களுடைய நிறுவனத்தின் தகவல்களை காவல்துறைக்கு புரோட்டான் நிறுவனம் தர மறுத்து வருவதாக போலீசார் தகவலை தெரிவித்துள்ளனர்.

 

இது தொடர்பாக காவல்துறை நோடல் அதிகாரி மத்திய தகவல் தொடர்பு துறைக்கு சென்னை போலீசார் தகவலை தெரிவித்துள்ளனர். இந்த புரோட்டான் நிறுவனத்தின் மெயிலை முடக்க வேண்டும் என்ற போலீசாரின் கோரிக்கை அடிப்படையில் புரோட்டான் மெயிலை முடக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon