தங்க சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 9 பேர்..!
துருக்கியில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒன்பது தொழிலாளர்கள் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள இந்த சுரங்கத்தில் மண் மலைகள் போல குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மன்சரிவில் சிக்கி 9 சுரங்க தொழிலாளர்கள் மாயமாகி உள்ளனர். இதனையடுத்து மீட்பு குழுவினர் மாயமான தொழிலாளர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்டு தண்ணீரை போல பாய்ந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





