ஓட்டுனருக்கு நெஞ்சு வலி.. மரத்தில் மோதிய மினி பேருந்து..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து மேட்டுப்பட்டி சென்று கொண்டிருந்த தனியார் மினி பேருந்தில் ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சுவலிக்கு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலையோர தள்ளுவண்டி கடையின் மீது மோதி தொடர்ந்து அங்கிருந்த கம்பத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.
பேருந்து ஓட்டுனரும், காயமடைந்த இரண்டு பயணிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.





