டிராக்டரில் பைக் மோதி விபத்து.. செவிலியர் செய்த பாராட்டுக்குரிய செயல்..!
மானாமதுரை அருகே விபத்தில் கடுகாயமடைந்த உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் முதலுதவி அளித்த அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.
அரசு மருத்துவமனை செவிலியர் மதுரை ராமநாதபுரம் நெடுஞ்சாலை அமைந்துள்ள மேம்பாலத்தில் மானாமதுரையை சேர்ந்த கண்ணன் வந்த பைக் எதிர்பாராத விதமாக டிராக்டரில் மோதி விபத்து ஏற்பட்டு அதில் படுகாயம் அடைந்தார்.
அப்பொழுது அந்த வழியே திருமணத்திற்காக சென்று கொண்டிருந்த மானாமதுரை அரசு மருத்துவமனை செவிலியர் மாலதி உடனடியாக முதலுதவி அளித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து கண்ணனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மாலதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.





