பட்ஜெட் கூட்டத்தொடர்.. மக்களவை மேலும் ஒரு நாள் நீட்டிப்பு..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கிய காரணங்களுக்காக சனிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது.
கடந்து ஒன்றாம் தேதி நிதி அமைச்சர் நில அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வந்தது. முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் பத்தாம் தேதி சனிக்கிழமையும் மக்களவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான அரசு 2014 மற்றும் தற்போதைய பொருளாதாரத்தின் நிலையை ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை நடப்பு தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





